×

ஆட்டோ ஓட்டியபடி கோயில்களை நோட்டமிட்டு உண்டியல்களை திருடிய 2 பேர் கைது: பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிக்கினர்

சென்னை: வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் போதையில் சண்டை போட்டு கொண்டிருந்தனர். அப்போது விரும்பாக்கம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் அருகில் வருவதை பார்த்த 2 பேரும், அங்கிருந்து ஆட்டோவில் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து, ஆட்டோவை சோதனை செய்தபோது, 2 கோயில் உண்டியல்கள், ட்ரில்லிங் மெஷின், கட்டிங் மெஷின் இருந்தன. விசாரணையில், பிரபல கோயில் உண்டியல் கொள்ளையர்களான வடபழனி பகுதியை சேர்ந்த சூர்யா (21), சாலிகிராமத்தை சேர்ந்த சுரேஷ் (40) என தெரியவந்தது. சுரேஷ் பகலில் ஆட்டோ ஓட்டி வந்ததும், இரவில் சூர்யாவுடன் சேர்ந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், வடபழனி பகுதியில் உள்ள கோயில்களில் உண்டியலை திருடி வந்து, அதில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட  தகராறில் இருவரும் சாலையில் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்திய ஆட்டோ, ட்ரில்லிங் மெஷின், கட்டிங் மெஷின், 2 உண்டியல்கள், ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்….

The post ஆட்டோ ஓட்டியபடி கோயில்களை நோட்டமிட்டு உண்டியல்களை திருடிய 2 பேர் கைது: பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vadapalani Kangayamman Temple Street ,Dinakaran ,
× RELATED சென்னை – கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலுக்குள் மழைநீர்